பாதாமும்.. பக்க விளைவுகளும்...

 Friday, January 7, 2022  10:08 AM   No Comments

பாதாமில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது. எனினும் பாதாமை அதிகம் உட்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

பாதாம் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டது. நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஈ, மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், பாஸ்பரஸ்.. என பாதாமில் உள்ளடங்கி இருக்கும் ஊட்டச்சத்துக்களின் பட்டியல் நீளமானது.

எலும்பு ஆரோக்கியம், மன நிலையை மேம்படுத்துவது முதல் இதய நோய், புற்றுநோய், நீரிழிவு அபாயங்களை குறைப்பது வரை பாதாம் எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. எடை இழப்புக்கும் உதவுகிறது. பாதாமில் இருந்து தயாரிக்கப்படும் பால் ஆரோக்கியமானது.

அதில் கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது. எனினும் பாதாமை அதிகம் உட்கொள்வது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

வயிறு பிரச்சினை

பாதாம் அதிகமாக உட்கொள்வது செரிமான பிரச்சினைக்கு வித்திடும். குமட்டல், வயிற்று போக்கு, வயிற்று அசவுகரியம் போன்ற குடல் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பாதாம் மட்டுமின்றி அதிக அளவு ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் கொண்ட உணவு பொருட்களை அதிகமாக உட்கொண்டாலும் இந்த பிரச்சினை உண்டாகும்.

ஒவ்வாமைஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்களுக்கு பாதாம் பால் இயற்கையாகவே உகந்தது அல்ல. பாலில் உள்ள சர்க்கரை (லாக்டோஸ்) முழுமையாக செரிமானம் ஆகாமல் அவதிப்படுபவர்கள் அதாவது ‘லாக்டோஸ் அலர்ஜி’ கொண்டவர்கள் பாதாம் பால் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

தைராய்டு பாதிப்பு

பாதாம் பால் ‘கோய்ட்ரோஜெனிக் உணவாக’ கருதப்படுகிறது. அதாவது அதிக அளவில் பாதாம் பால் உட்கொள்ளும் போது அதில் தைராய்டு பாதிப்பை அதிகப்படுத்தும் ரசாயனங்கள் கலந்துவிடும். அதனால் தைராய்டு சுரப்பிகளின் செயல்பாடு குறைவாக உள்ளவர்கள், தைராய்டு பாதிப்புக்கு ஆளானவர்கள் பாதாம் பால் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பக்கவிளைவு

குழந்தைகளுக்கு பாதாம் பால் சிறந்தது அல்ல. குழந்தைக்கு தேவையான சரியான அளவு ஊட்டச்சத்துக்கள் அதில் இருப்பதில்லை. ஒட்டுமொத்தமாக பாதாம் பால் ஆரோக்கியமானது. ஆனால் சில பக்க விளைவுகளையும் கொண்டிருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தினமும் ஒரு கப் அதாவது 240 மி.லிட்டருக்கு மேல் பாதாம் பால் பருகக்கூடாது.

சர்க்கரை

வணிக ரீதியாக தயார் செய்யப்படும் பாதாம் பாலில் பசுவின் பாலைவிட சர்க்கரை அதிகமாக உள்ளது. அதனால் அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel