திருநள்ளாறில் சிறுவர்களுடன் விளையாடும் சனீஸ்வரர் கோவில் யானை

 Monday, January 24, 2022  10:01 AM   No Comments

திருநள்ளாறில் சிறுவர்களுடன் சனீஸ்வரர் கோவில் யானை பிரக்ருதி விளையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனி பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். கொரோனா பரவல் காரணமாக தற்போது கோவிலுக்கு பக்தர்களின் வருகை குறைந்துள்ளது.இந்த கோவிலில் 17 வயது பிரக்ருதி என்ற பெண் யானை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர் களுக்கு ஆசி வழங்கி வருகிறது. இந்த யானை பொதுமக்களிடம் மிகவும் அன்பாக பழகக்கூடியது.

கொரோனா காலம் என்பதால் காரைக்கால் நேதாஜி நகரை சேர்ந்த சகோதரர்களான யுவ பாரதி, நாராயணன் ஆகியோர் தினமும் கோவிலுக்கு வந்து யானையிடம் பழகி வந்துள்ளனர்.சிறுவர்களை பார்த்தால் போதும் யானை பிரக்ருதி குஷியாகி விடும். குளத்தில் மூழ்கி ஒளிந்து கொள்ளும், சிறுவர்கள் சத்தம் போட்டல் கரைக்கு வரும். பின்னர் சிறுவர்களுடன் யானை பிரக்ருதி விளையாடுகிறது.

சிறுவர்கள் வீட்டுக்கு செல்லும் போது ஆசீர்வாதம் செய்து டாடா சொல்லி வழியனுப்பி வைக்கும். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிறுவர்களுடன் அன்பாக பழகும் யானையின் குணத்தை பார்த்து அனைவரும் அதிசயித்துள்ளனர்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel