பூர்வ ஜென்ம பாவம் நீங்க பரிகாரங்கள்

 Saturday, January 29, 2022  09:59 AM   No Comments

பூர்வ ஜென்மத்தில் செய்ததால் இப்பிறவியில் துன்பங்களை அனுபவிப்பதாக நம்பும், கருதும் நபர்கள் தங்கள் செய்த பூர்வ ஜென்ம வினைகளுக்கான பயனை அனுபவித்தே தான் தீர வேண்டும்.

நாம் இப்போது வாழும் வாழ்க்கை, அதில் ஏற்படும் பல வகையான இன்ப, துன்ப அனுபவங்கள் எல்லாமே முற்பிறவியுடன் தொடர்புடையது என இந்து மற்றும் புத்த, சமண மதங்களின் சாத்திரங்களும் கூறுகின்றன. பூர்வ ஜென்மத்தில் செய்ததால் இப்பிறவியில் துன்பங்களை அனுபவிப்பதாக நம்பும், கருதும் நபர்கள் தங்கள் செய்த பூர்வ ஜென்ம வினைகளுக்கான பயனை அனுபவித்தே தான் தீர வேண்டும். ஆனால் இப்பிறவியில் நமக்கு ஏற்படவிருக்கிற பூர்வ ஜென்ப வினை பயன்கள் தீவிர தன்மையை சில பரிகாரங்கள் செய்வதன் மூலம் நாம் குறைக்க முடியும்.பூர்வ ஜென்ம கர்ம வினைப்பயன்களின் கடுமைத்தன்மையை குறைக்க விரும்புபவர்கள் மாமிச உணவுகள், போதை வாஸ்து போன்றவற்றை உண்பதை அறவே நீக்கிவிடுவது உத்தமமான பரிகாரம் ஆகும். தினந்தோறும் உங்கள் இல்லங்கள் அல்லது வேறு எங்காவது பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிப்பதை வாடிக்கையாக்கிக் கொள்ளவேண்டும். சிவபெருமானின் கோவில்களுக்கு மகாசிவராத்திரி, சனிப்பிரதோஷம் போன்ற தினங்களில் சென்று வழிபடுவதும் நன்மையை ஏற்படுத்தும்.

வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை போன்றவற்றை கொடுத்து வரவேண்டும். எப்போதும் முதியவர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து, அவர்களிடம் ஆசிகளை பெறுவது சிறந்தது. குரு, துறவிகள், ஞானிகள் போன்றோருக்கு அன்னதானம் மற்றும் வஸ்திர தானம் செய்வது உங்களின் பூர்வ ஜென்ம பாவங்கள், கர்மவினைகள் போன்றவற்றை போக்கும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel