கோனியம்மன் தெப்பத் திருவிழா

 Saturday, March 5, 2022  10:26 AM   No Commentsகோவை:கோவையில் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. கோனியம்மன் தேர் திருவிழாவின், 11ம் நாளான நேற்று, இரவு 7:30 மணியளவில், அம்மன் இந்திர விமானத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி துவங்கியது. ராஜவீதி, ஒக்கிலியர் வீதி, ஐந்து முக்கு, பெரியகடைவீதி, ஒப்பணக்காரவீதி, வைசியாள்வீதி, சலிவன் வீதி வழியாக வேணுகோபால் சுவாமி கோவிலை அடைந்தது. இரவு 10:30 மணிக்கு மேல் அங்குள்ள தெப்பத்தில் தெப்பத் திருவிழா கொண்டாடப்பட்டது. திருவீதி உலாவின் போதும், தெப்பத்திருவிழாவின் போதும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel