கோவையில் 300 வருட பழமையான பீளமேடு என்கிற பூளைமேடு

 Wednesday, May 25, 2022  06:14 AM   No Comments

மேற்கே வெள்ளியங்கிரி மலை (மேற்கு தொடர்ச்சி மலை) வடக்கே தலைக்காடு (கோபி) தெற்கே வாகையூர் (பழனி) ஆகியவை கொங்கு நாட்டின் எல்லைகளாக வரையறுக்கப்பட்டன. கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்த இன்றைய பேரூர் மற்றும் இதைச் சுற்றியுள்ள ஊர்களை இணைத்து பேரூர் நாடு என்று அழைக்கப்பட்டது.
இதில், ஒரு கிராமமாக இருந்ததுதான் இன்றைய கோவை. கோவன் என்ற இருளர் தலைவனின் ஆளுகையின் கீழ் இந்நிலப்பகுதி இருந்ததால் கோவன்பதி என்றும், கோவன்புத்தூர் என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் இப்பெயர் திரிந்து கோயமுத்துர் ஆனது. பேரூர் நாட்டை கேக்கண்டன் ரவி என்ற சேர மன்னன் ஆண்ட போது, மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னன் கொங்கு நாட்டை வென்று பேரூர் நாட்டையும் கைப்பற்றினான்.

பின்னர் தலைக்காட்டுக் கங்கர்கள் கைப்பற்றினர். கி.பி., 7 ம் நூற்றாண்டுக்கு பிறகு கங்கர்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த சோழர்கள், கொங்கு சோழர்கள் என அழைக்கப்பட்டனர். கி.பி., 13 ம் நூற்றாண்டுக்கு பிறகு கொங்கு நாடு பாண்டியர்களின் வசமானது. சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக்கு பின் ஒய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தனரும், மைசூரின் கண்டிகர்களும் ஆண்டனர்.

அதன் பின் விஜய நகர பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி., 16 ம் நூற்றாண்டில் கோவை, மதுரை நாயக்கர்களின் ஆட்சியின் கீழ் வந்தது; 18ம் நூற்றாண்டுக்கு பிறகு பேரூர் நாடு, ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோரால் ஆளப்பட்டது. 1799 ல் நடந்த நான்காம் மைசூர் போரில் திப்புசுல்தான் கொல்லப்பட்ட பிறகு கோவை முழுவதும் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்தன.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில்தான் கோவை சிறப்பான வளர்ச்சியை அடைந்து. 1805 ம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு கோவை அதன் தலைநகரமானது. 1866 ல் கோவை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் முதல் தலைவராக மெக்ரிகர் இருந்தார். 1888 ல் ஸ்டேன்ஸ் மில் துவங்கப்பட்டது.

1914 வரை இங்கு 3 மில்கள் மட்டுமே இருந்தன.

கோவை பகுதிகளில் பருத்தி விளைச்சல் அதிகமானதாலும், இங்குள்ள தட்ப வெப்ப நிலை நூற்பாலை தொழிலுக்கு ஏற்றதாகவும் இருந்ததாலும், பைக்காரா மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் அதிகம் கிடைத்ததாலும் பல நூற்பாலைகள் இங்கு தோன்றின. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரம் ஜவுளித்தொழிலில் சிறந்து விளங்குவது போல் கோவை இத்தொழிலில் சிறந்து விளங்கியதால் 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' என பெயர் பெற்றது கோவை.

பீளமேடு...வளர்ச்சியின் வரலாற்று பாதை1711 நவ. 11 -பீளமேடு பிறந்த நாள்
1911 ஜன. 25 -பீளமேட்டில் ரங்கவிலாஸ் பஞ்சு அரவை ஆலை(ஜின்னிங் தொழிற்சாலை) துவக்கம்.(பின்னர் 1922ல் இது ரங்கவிலாஸ் நூற்பாலையாக உயர்ந்தது)
1924 ஜூன் 4 -சர்வஜன உயர்நிலை பள்ளியை மேல்சபை உறுப்பினர் வேங்கடரமண அய்யங்கார் துவங்கி வைத்தார்.
1926 ஜூன் 14 -பி.எஸ்.ஜி., அறநிலையத் துவக்க விழா. பி.எஸ்.ஜி., தொழிலகத்துக்கு அடிக்கல் நாட்டு விழா.
1929 ஆக. 13 -பி.எஸ்.ஜி., தொழிலகத் தொழிற்பயிற்சி பிரிவு துவக்கம்.
1939 ஜூலை 15 -பி.எஸ்.ஜி., பல் தொழில்நுட்பக்கல்லூரி(பாலிடெக்னிக்) தமிழ்நாட்டில் முதல் பாலிடெக்னிக் இது.
1945 -சர் ஆர்தர் ஹோப் 'ஹோப் காலேஜ்' துவங்கினார்.
1947 ஆக. 11 - பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி துவக்கம். கோவை மாவட்டத்தின் முதல் தனியார் கல்லூரி இது.
1948 - அறிவியல் தமிழ் மாத இதழான 'கலைக்கதிர்' வெளிவர துவங்கியது.
1951 ஜூலை 16 - பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லூரி துவக்கம். தமிழ்நாட்டின் முதல் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி இது.
1956 ஜூன் 4 - பி.எஸ்.ஜி., அர. கிருஷ்ணம்மாள் பள்ளி செயல்பட துவங்கியது.
1985 செப். 30 -பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி துவக்கம்.
1989 -பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லூரி மருத்துவமனை துவக்கம்.
அண்ணல் காந்தியடிகள், இந்திய குடியரசு தலைவர்களான டாக்டர். ராஜேந்திர பிரசாத், டாக்டர். ஜாகீர் உஷேன், பாரத ரத்னா ஏ.பி.ஜே. அப்துல் கலாம், கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், சர்.சி.வி., ராமன், மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார் ஆகியோர் பீளமேடு வருகை தந்த பெரியோர்களில் குறிப்பிடத்தக்கோர்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel