இன்று உலக இசை தினம்: இசையால் ஏற்படும் நன்மைகள்!

 Tuesday, June 21, 2022  05:37 AM   No Comments

இசையைக் கேட்பதால் மூளை, மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்னும் ஹார்மோனை சுரக்கச் செய்கிறது.

இசையையும் மனிதனையும் பிரிக்க முடியாது என்பார்கள். அதனால்தான் இசையால் நாமும் நம்மால் இசையும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இசையின் ஆழத்தை உணர்ந்த ஃபிரெஞ்ச் அரசியல்வாதி ஜாக் லாங் மற்றும் இசையமைப்பாளர் மௌரிக் ஃபிளியூரெட் இருவரும் இசையின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துகொள்ளவே இந்நாளை உருவாக்கினார்கள். அதன்பிறகே பாரிஸில் 1982-ம் ஆண்டு முதல் இசை நாள் கொண்டாடப்பட்டது. அப்படி என்னதான் நன்மைகள் என்று பார்க்கலாம்.

மனநிலையை உற்சாகமாக்கும்: இசையைக் கேட்பதால், மூளை மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய டோபமைன் என்ற ஹார்மோனை சுரக்கச் செய்கிறது. இதனால் இசையைக் கேட்கும்போது மகிழ்ச்சி, ஃபீல் குட் உணர்வு தோன்றுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.மனஅழுத்தம் குறையும்: மென்மையான இசையைக் கேட்கும்போது மனஅழுத்தத்தின்போது சுரக்கக் கூடிய கோர்டிசோல் (Cortisol) என்ற ஹார்மோன் சுரப்பது குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் எந்த சோகமாக இருந்தாலும் பிடித்த இசையைக் கேட்கும்போது மனது இலகுவாகிறது.

பதட்டம் குறையும்: புற்றுநோயில் இருப்போர் பலருக்கு இசையைக் கேட்க பரிந்துரைத்ததில் அவர்களுக்கு இருக்கும் பதட்டம் குறைந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.

மனச்சோர்வு குறையும்: உலகில் 350 மில்லியன் மக்கள் மனச் சோர்வால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவர்களுக்கு இசையை முதல் மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவ்வாறு தூங்கும் முன் இசைக் கேட்டுக்கொண்டே தூங்கினால் கவலைகள் மறந்து ஆழ்ந்து தூங்குவதாக நோயாளிகள் தெரிவித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உடற்பயிற்சிக்கு ஊக்கம் : உடற்பயிற்சியின் போதும், ஜாகிங், நடைப்பயிற்சி இப்படி எதுவாயினும், இசை கேட்டுக் கொண்டே செய்தால் தொய்வில்லாமல் சுருசுருப்படையச் செய்யும்.

ஞாபகத்திறன் அதிகரிக்கும்: நாம் கேட்கும் இசை அல்லது பாடல் வரிகள்களை எப்போது கேட்டாலும் நினைவுக்கு வருகிறது என்றால், நம் ஞாபகத்திறனின் வளர்ச்சியை தூண்டப்படுவதே காரணம். இதனால் நம்முடைய ஞாபகசக்தி அதிகரிக்கும்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel