நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்புமனுதாக்கல் இன்று தொடங்கியது

 Tuesday, June 21, 2022  06:00 AM   No Comments

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் இருந்தார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் மாரடைப்பால் இறந்து விட்டார். இதையடுத்து அந்த ஊராட்சி தலைவர் பதவி காலியாக இருந்தது. இதையடுத்து ஊராட்சி தலைவர் பதவிக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என ஊர் மக்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தேர்தல் தேதியை தமிழக தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.

அதன்படி காலியாக உள்ள நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம்(ஜூலை)9-ந் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் களைகட்ட தொடங்கி உள்ளது.

நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல்கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது. இதனையொட்டி அங்கு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. காலை முதலே தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனுதாக்கல் செய்வதற்காக கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

இதேபோல் நல்லட்டிபாளையம் ஊராட்சியில் காலியாக உள்ள 4-வது வார்டு உறுப்பினர் பதவி, குருநல்லிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர், சொக்கனூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வேட்பு மனுதாக்கல் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் நடந்தது. அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்புமனுதாக்கல் செய்தனர்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel