பெயரில் இருந்த 'ஐயர்' என்ற வார்த்தையை நீக்கிய நடிகை!

 Tuesday, June 21, 2022  12:05 PM   No Comments

நடிகை ஜனனி ஐயர் தன்னுடைய பெயரில் இருந்த ஐயர் என்ற வார்த்தையை நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். எனவே, தன்னை ஜனனி என்று அனைவரும் அழைக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளார்.அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வேழம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில், படத்தின் நாயகன் அசோக் செல்வனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவரை தவிர படத்தின் நாயகிகள் ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன், இயக்குனர் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அவர் தற்போது ஜனனி ஐயர் என்ற பெயரில் இருந்த சமூகத்தின் வார்த்தையை நீக்கி விட்டதாக தெரிவித்து இருக்கிறார். எனவே,  அனைவரும் தன்னை ஜனனி என்று அழைக்கவும் வேண்டுகோள் வைத்துள்ளார். இவரைத் தவிர ஐஸ்வர்யா மேனன், வேழம் திரைப்படம் 24ஆம் தேதி வருகிறது.  அதை அனைவரும் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன் படத்தின் இயக்குநர் சந்தீப் நடிப்பதற்கு அதிக வாய்ப்புக் கொடுத்தார் அதற்கு நன்றி எனவும் தெரிவித்தார். வேழம் என்பது யனையை குறிக்கும் செயல் என்பது குறிப்பிடத்தக்கது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel